குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் பயிற்சி

குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து சென்னையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியளித்தனர்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து சென்னையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியளித்தனர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24}ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்து புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில், வாக்குப்பதிவு திங்கள்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.

தமிழக சட்டபேரவை வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர் தனபால் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்கின்றனர். வாக்களிப்பது தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுக்கான பயிற்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஜெயகுமார் பயிற்சியளித்தார். இப்பயிற்சியில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பெஞ்சமின், சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை அடையாறு கீரின்வேஸ் சாலையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அவர்களின் வீடுகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் பயிற்சியளித்தனர். எப்படி பிழையில்லாமல் வாக்களிப்பது என்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிக்க அனுமதி கோரியுள்ளார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கேரளத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல்லா என்பவரும் சென்னையில் வாக்களிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com