ஜி.எஸ்.டி எதிரொலி: மாநகர ஏசி பேருந்துகளில் கட்டணம் அதிகரிப்பு

அரசு மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பேருந்துகளில் ஜி.எஸ்.டி உயர்வு காரணமாக ரூ.1 முதல் ரூ.5 வரை கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி எதிரொலி: மாநகர ஏசி பேருந்துகளில் கட்டணம் அதிகரிப்பு

அரசு மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பேருந்துகளில் ஜி.எஸ்.டி உயர்வு காரணமாக ரூ.1 முதல் ரூ.5 வரை கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தாம்பரம், பிராட்வே, கோவளம், வண்டலூர், கேளம் பாக்கம், தியாகராயநகர், மாமல்லபுரம், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 100 குளிர்சாதன வசதி கொண்ட வால்வோ பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில் தொடக்க கட்டணமாக ரூ.15 முதல், அதிகபட்சம் ரூ.100 வரையில் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தப் பேருந்துகள் மழைக்காலங்களில் மட்டும் இயக்கப்படமாட்டாது. ஆனால், வெயில் காலங்களில் ஒட்டுமொத்தமாக குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகளும் பராமரித்து முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் 36 குளிர்சாதன பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. 64 பேருந்துகள் பழுது காரணமாக பராமரிப்புப் பணிகளுக்காக அந்தந்த பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், வெயில் காரணமாக பயணிகள் அதிகம் பேர் இப்பேருந்தில் ஆர்வமாக பயணித்து வந்தனர். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டியால் இப்பேருந்துகளில் ரூ.1 முதல் ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கையடக்க கருவியின் ஜி.எஸ்.டியையும் சேர்த்து பயணச்சீட்டுக் கட்டணாக வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ஐ.டி.பணியாளர் வசந்தராஜன் கூறியதாவது: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் குளிர்சாதன பேருந்துகள் நீண்டதூரம் செல்வதற்கும், இடைநில்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்வதற்கு வசதியாக உள்ளது. இவ்வசதியுள்ள 100 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 36 பேருந்துகளாக எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்நிலையில், தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்பேருந்துகளில் ரூ.5 வரை கட்டணம் அதிகரித்துள்ளது . கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com