தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது: ராமதாஸ் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கக் கோரி விரைவில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார்.
கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் .
கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் .

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கக் கோரி விரைவில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார்.

நீதிமன்றம் மூலம் மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸýக்கு பாராட்டு விழா மற்றும் கட்சியின் 29}ஆவது ஆண்டு தொடக்க விழா வேலூர் மாவட்டம், மேல்மொணவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமை வகித்தார்.
இதில் ராமதாஸ் பேசியதாவது:
வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வலியுறுத்தி என்னுடைய தலைமையில் விரைவில் போராட்டம் ந'டைபெறும். வேலூரில் தொடங்கிய சிப்பாய் புரட்சி தான் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகமாக உருவெடுத்தது. அதேபோல, ஆட்சி மாற்றத்துக்காக வேலூரில் தொடங்கியுள்ள இந்தப் புரட்சி அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை திமுக கொண்டு வந்தது. ஆனால் மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. இந்திய அரசியலமைப்பை மத்திய அரசு சிதைத்து விட்டது.
தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் மாற்றம் நடக்கும். இல்லையெனில் எதுவும் நடக்காது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றார் ராமதாஸ்.
கூட்டத்தில் கட்சியின் இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் பேசியது:
தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என மெளனப் புரட்சி நடக்கிறது. மக்களைப் பற்றி கவலைப்படுவதோடு, திமுக, அதிமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி பாமக மட்டும் தான்.
தமிழகத்தை திமுக, அதிமுகவின் பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். பாமக கொள்கைகளைத் தான் மற்ற கட்சிகள் பின்பற்றி வருகின்றன. தமிழகத்தில் திமுகவுக்கு தற்போது என்ன செய்வது என்றே தெரியாததால் தான் எங்களது கொள்கைகளை காப்பியடிக்கிறார்கள். பாமக ஆட்சிக்கு வந்தால் வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும்.
கடந்த 2015ஆம் ஆண்டில் 31 டிஎம்சி தண்ணீர் பாலாற்றின் வழியாக கடலில் கலந்தபோதும், மணல் எடுக்க முடியாது என்பதால் தான் தடுப்பணைகள் கட்ட ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள் என்றார் அன்புமணி.
பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் பி.கே.வெங்கடேசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com