நெய்வேலியில் என்.எல்.சி சுரங்கம் முற்றுகை: ஒப்பந்த தொழிலாளர்கள் 460 பேர் கைது

நெய்வேலியில் என்.எல்.சி சுரங்கம் 1A-வை கண்டித்து முற்றுகையிட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 460 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெய்வேலியில் என்.எல்.சி சுரங்கம் 1A-வை கண்டித்து முற்றுகையிட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 460 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணி நாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து என்.எல்.சி சுரங்கம் 1A-வில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாகப் பணி புறக்கணிப்பு செய்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5-ம் நாளான திங்கட்கிழமை காலை சுரங்கம் 1A- பகுதியில் எ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலர் எம்.சேகர் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களைக் கைது செய்து நெய்வேலியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மாதத்திற்கு 26 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலை உணவையும் புறக்கணித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் முற்றுகை நடந்த பகுதிக்குச் சென்று தன்னுடைய ஆதரவை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தெரிவித்தார்.

ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் என்.எல்.சி விரிவாக்கப் பணிக்காக தங்களுடைய வீடு, நிலம் வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதத்திற்கு 26 நாட்கள் பணி வழங்கப்பட்டு வந்த நிலையில் என்.எல்.சி திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 19 நாட்களாகக் குறைத்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com