பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.

தமிழகம் முழுவதும் 583 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் மொத்தம் 2,53,204 இடங்கள் உள்ளன. இதில், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைத்துள்ள 15,737 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்பட மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 643 பி.இ., பி.டெக். இடங்கள் கலந்தாய்வு மூலம் இம்முறை நிரப்பப்பட உள்ளன. 

இந்நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. கலந்தாய்வின் முதல் இரண்டு தினங்கள் பிளஸ் 2 தொழில் கல்வி பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கென 6,224 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,67,419 இடங்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வு மூலமும் நிரப்பப்படும்.

இதன் பிறகு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், விளையாட்டுப் பிரிவினருக்கும் இறுதியாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும். 

முக்கியத் தேதிகள்:
பிளஸ் 2 தொழில் கல்வி பிரிவி மாணவர்களுக்கான கலந்தாய்வு - ஜூலை 17, 18.
மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு - ஜூலை 19.
விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு - ஜூலை 19, 20.
விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு - ஜூலை 21.
பொதுப் பிரிவு கலந்தாய்வு - ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 11 வரை.
துணைக் கலந்தாய்வுக்கான பதிவு - ஆகஸ்ட் 16.
துணைக் கலந்தாய்வு - ஆகஸ்ட் 17.
அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு காலி இடங்களில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கை கலந்தாய்வு - ஆகஸ்ட்18.

கலந்தாய்வுக்கான அட்டவணையை www.tnea.ac.in என்ற இணைய தளத்தில் மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com