மருத்துவமனையிலிருந்து வந்து வாக்களித்த திமுக உறுப்பினர்
By DIN | Published on : 18th July 2017 01:34 AM | அ+அ அ- |
குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே.மோகன் மருத்துவமனையில் இருந்து வந்து வாக்களித்தார்.
அண்ணாநகர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே.மோகன். உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக சிரை வழியாக ஏற்றப்படும் உயிர்ச்சத்துகள்
நிறைந்த நீர் ஏற்றப்பட்டதற்கான ஊசி குழாய் பொருத்தப்பட்ட நிலையில் தலைமைச் செயலகத்துக்கு வந்து வாக்களித்தார். அதன் பின், மருத்துவமனைக்குத் திரும்பிய அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.