குடியரசுத் தலைவர் தேர்தல்: புதுவையில் 30 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிப்பு

நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலின் ஒரு பகுதியாக புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 30
குடியரசுத் தலைவர் தேர்தலில், புதுச்சேரியில் திங்கள்கிழமை வாக்களித்த முதல்வர் நாராயணசாமி. (வலது) வாக்களித்த புதுவை சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி.
குடியரசுத் தலைவர் தேர்தலில், புதுச்சேரியில் திங்கள்கிழமை வாக்களித்த முதல்வர் நாராயணசாமி. (வலது) வாக்களித்த புதுவை சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி.

நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலின் ஒரு பகுதியாக புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 30 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குப் பதிவுக்காக பாதுகாப்பு முன்னேற்பாடுகள், ஸ்ட்ராங் ரூம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஏற்கெனவே, மத்திய பார்வையாளர் அருண் யாதவ், மாநில தலைமை தேர்தல் அதிகாரி வி.கந்தவேலு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் என்பதால் எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் கழித்தே வரத் தொடங்கினர்.
முதலில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன் தலைமையில் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் வாக்களித்தனர். அவர்களைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் வாக்களித்தார்.
பின்னர், முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜஹான், பேரவைதுணைத் தலைவர்வி.பி.சிவக்கொழுந்து, கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேலு, திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ ஆகியோர் ஒன்றாக வந்து வாக்களித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் தனியாக வந்து வாக்களித்தார். சுயேச்சை எம்.எல்.ஏ. பேராசிரியர் ராமச்சந்திரனை வாக்களிக்க முதல்வர் நாராயணசாமி அழைத்து வந்தார்.
பிற்பகல் 12.20 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் டிபிஆர்.செல்வம், ஜெயபால், சந்திர பிரியங்கா, கோபிகா, சுகுமாறன், அசோக் ஆனந்து ஆகியோர் ஒன்றாக வந்து வாக்களித்தனர்.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன், அதிமுக சார்பில் அன்பழகன், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வழக்குரைஞர் பக்தவத்சலம் ஆகியோர் முகவர்களாக செயல்பட்டனர்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 15, என்.ஆர். காங்கிரஸ் 8, அ.தி.மு.க. 4, தி.மு.க. 2, ஒரு சுயேச்சை உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு தலா 16 ஆகும். மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள்தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் இருவரும் தில்லியிலேயே வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலுக்காக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது. வெளியாள்கள் உள்ளே நுழைந்து விடாதபடி இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com