கோவை-பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்

கோவை-கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே செவ்வாய்க்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

கோவை-கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே செவ்வாய்க்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
கோவையில் இருந்து கிருஷ்ணராஜபுரத்துக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு கோவைக்கு வந்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, கிருஷ்ணராஜபுரத்துக்கு இரவு நேர ரயில் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) முதல் செப்டம்பர் 26-ஆம் தேதி வரை 11 முறை சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
வண்டி எண் (06060 ): கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கிருஷ்ணராஜபுரம் சென்றடையும்.
அதேபோல், வண்டி எண் (06059) கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து புதன்கிழமை இரவு 9.30 அளவில் புறப்பட்டு திருப்பத்தூர், சேலம்,ஈரோடு, திருப்பூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com