சித்திர வீணைக் கலைஞர் ரவிகிரணுக்கு சங்கீத கலாநிதி விருது

சித்திர வீணைக் கலைஞர் என்.ரவிகிரணுக்கு மியூசிக் அகாதெமியின் உயரிய விருதான சங்கீத கலாநிதி விருது வழங்கப்படவுள்ளது.
சித்திர வீணைக் கலைஞர் ரவிகிரணுக்கு சங்கீத கலாநிதி விருது

சித்திர வீணைக் கலைஞர் என்.ரவிகிரணுக்கு மியூசிக் அகாதெமியின் உயரிய விருதான சங்கீத கலாநிதி விருது வழங்கப்படவுள்ளது.
சென்னை மியூசிக் அகாதெமி சார்பில் இசையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் உயரிய விருதாக சங்கீத கலாநிதி விருது கருதப்படுகிறது.
சங்கீத கலா ஆச்சார்யா விருதுகள், டிடிகே விருதுகள், இசை வல்லுநர் விருது ஆகியவையும் வழங்கப்படுகின்றன. நிகழாண்டில் விருது பெறும் கலைஞர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மியூசிக் அகாதெமியின் தலைவர் என்.முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு விருதுக்கான இசைக் கலைஞர்களைத் தேர்வு செய்வதற்கான மியூசிக் அகாதெமியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சித்திர வீணைக் கலைஞரான என்.ரவிகிரணுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை நடைபெறும் மியூசிக் அகாதெமியின் 91-ஆவது ஆண்டு மாநாட்டுக்கு விருதுக்குத் தேர்வான என்.ரவிகிரண் தலைமை வகிப்பார். அவருக்கு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும்.
மிருதங்க கலைஞர் வி.கமலாகர் ராவ், பாடகர் ராதா நம்பூதிரி ஆகியோருக்கு சங்கீத கலா ஆச்சார்யா விருதுகளும், கடம் இசைக் கலைஞர் சுகன்யா ராம்கோபால், ஓதுவார் பரம்பரையைச் சேர்ந்த பண்ணிசைப் பேரறிஞர் திருப்பனந்தாள் சோ.முத்து கந்தசாமி தேசிகர் ஆகியோருக்கு டிடிகே விருதுகளும், டி.எஸ்.சத்யவாணிக்கு இசை வல்லுநர் விருதும் வழங்கப்படவுள்ளன. வயலினுக்கான பாப்பா வெங்கடராமையா விருது திருவள்ளூர் பார்த்தசாரதிக்கு வழங்கப்படுகிறது.
ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் நாட்டிய விழாவில் பரத நாட்டியக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதனுக்கு நாட்டியத்துக்கான நிருத்ய கலாநிதி விருது வழங்கப்படுகிறது.
குழந்தை மேதையாக... குழந்தை மேதையாக இசைத்துறையில் நுழைந்தவர் சித்திர வீணைக் கலைஞர் ரவிகிரண். இசை மீது கொண்ட தீராத ஆர்வம் மற்றும் ஈடுபாட்டால் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
குருவாக இருந்து பலருக்கு முறையான கர்நாடக சங்கீத இசையைக் கற்றுத் தந்து வருகிறார். ரவிகிரணுக்கு 'சங்கீத கலாநிதி' விருது அறிவிக்கப்பட்டுள்ளது பொருத்தமான விஷயம் என இசைத்துறையில் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சோ.முத்து கந்தசாமி தேசிகர்: தருமபுரம் ஆதீனம் தேவாரப் பாடசாலையில் திருமுறைப் பண்ணிசையை 5 ஆண்டுகள் முறையாகப் பயின்று கடந்த 1958-ஆம் ஆண்டு தேவார இசை மணி பட்டம் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com