தங்கம் பவுனுக்கு ரூ.32 உயர்வு

ஆபரணத் தங்கம் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.21,192-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கம் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.21,192-க்கு விற்பனையானது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பில் ஏற்ற-இறக்கம், சர்வதேச பொருளாதாரச் சூழல் ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளன.
சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4 உயர்ந்து, ரூ.2,649-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 39 ரூபாய் 70 பைசாவாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.39,700 ரூபாயாகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை நிலவரம்
(ரூபாயில்- இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,649
1 பவுன் தங்கம் 21,192
1 கிராம் வெள்ளி 39.70
1 கிலோ வெள்ளி 39,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com