நடிகர் கமல் கருத்துக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு: கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

நடிகர் கமலின் கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நடிகர் கமலின் கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வது அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள அரசியல் சட்ட உரிமை. ஆனால், இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் நடிகர் கமலுக்கு எதிராக சில மூத்த அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்து வருவது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு கருத்துகள் கூறுவதற்குப் பதிலாக, உண்மைகள் மற்றும் விவரங்கள் இருப்பின் அதனடிப்படையில் மறுப்பதற்கான உரிமை ஆளும் கட்சிக்கும், அமைச்சர்களுக்கும் உண்டு. ஆனால், இந்த விமர்சனத்திற்கு உள்நோக்கம் கற்பிப்பதும், கமல் கடந்த காலங்களில் அவர் முறையாக வரி கட்டி இருக்கிறாரா என்பதை விசாரிப்போம் என்று மூத்த அமைச்சர்கள் பேசுவதும் மிரட்டும் செயலாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நடிகர் கமல் உண்மையைத்தான் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் கருத்துக்கு மிரட்டுகிற முறையில் எதிர்மறை கருத்துக்களை அமைச்சர்கள் கூறுவது கண்டனத்துக்குரியது. ஆட்சி குறித்து கருத்துக் கூற குடிமக்களுக்கு முழு உரிமை உண்டு. அத்தகைய கருத்துரிமைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com