புதுவையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கண்டித்து இடதுசாரிகள்-விசிக ஆர்ப்பாட்டம்

புதுவையில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில்முனைவோர், வணிகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி இடதுசாரிகள்-விசிக சார்பில் காந்தி வீதியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவையில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில்முனைவோர், வணிகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி இடதுசாரிகள்-விசிக சார்பில் காந்தி வீதியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த ஜூலை 1- ம் தேதி முதல் மத்திய அரசு அமுல்படுத்தியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களும், இந்திய பெரு நிறுவனங்களும் தங்கள் தொழிலை தடையின்றி செய்வதற்காக ஜிஎஸ்டி என்ற ஒற்றை வரியை கொண்டு வந்துள்ளனர். நாட்டின் பன்முகத்தன்மையை குலைத்துகூட்டாட்சி தத்துவத்தையும் ஒழித்து, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் கொண்டு வருவதற்கான முயற்சியாகும். புதுச்சேரி மாநிலத்தில் புதிய தொழில்கள் தொடங்கும் நிலை இல்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. 

கடந்த 2009-ம் ஆணஅடு முதல் மத்திய அரசிடம் இருந்து கிடைத்து வந்த 70 சதவீத நிதி தற்போது 30 சதவீதமாகி விட்டது. நிதி நெருக்கடி, வேலையின்மை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஜிஎஸ்டியினால் புதுவை மக்கள் மீண்டும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இயற்கை வளமோ மூலப்பொருள்கள் சந்தையும் இல்லாத மாநிலம் புதுவை ஆகும். போதுமான உற்பத்தியும் இல்லை நுகர்வு சக்தியும் இல்லை எனவே 11 மாநிலங்கள் சிறப்பு பட்டியலில் புதுவையையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், விசிக அமைப்புச் செயலாளர் அமுதவன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், கீதநாதன், சேதுசெல்வம், முருகன்,  மார்க்சிஸ்ட் சார்பில் வெ.பெருமாள், பிரதேச குழு உறுப்பினர் முருகன், விசிக பொருளாள் தமிழ்மாறன், தலைமை நிலையச் செயலர் செல்வநந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com