அரசியலில் குதிக்கிறாரா கமல்..?

தமிழக அமைச்சர்களுக்கும், நடிகர் கமலுக்கும் கடந்த ஒரு வாரமாக வார்த்தைப் போர் நடந்துவரும் சூழலில், தனது டுவிட்டர் பக்கத்தில் சில அதிரடி
அரசியலில் குதிக்கிறாரா கமல்..?


சென்னை: தமிழக அமைச்சர்களுக்கும், நடிகர் கமலுக்கும் கடந்த ஒரு வாரமாக வார்த்தைப் போர் நடந்துவரும் சூழலில், தனது டுவிட்டர் பக்கத்தில் சில அதிரடி கருத்துகளை வெளியிட்டு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் கமல். கமலின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக நடிகர்கள் பார்த்திபன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நடிகர் கமல், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதையடுத்து கமலை தமிழக அமைச்சர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். ஜெயலலிதா இருந்த போது வாய் திறக்காத கமல் இப்போது வாய் திறக்கிறார் என்று அமைச்சர்கள் கூறினர்.

இதையடுத்து ஒவ்வொரு அமைச்சர்களின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் தனது டுவிட்டர் பக்கத்தில், நேரடியாகவும் மறைமுகமாகவும் நடிகர் கமல் பதிலளித்து வந்தார்.
 
அதில், யாம் மன்னரில்லை, யாம் முதல்வர் என்று வசனங்களை அள்ளி தெரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிக்பாபாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் தொடர்ந்து சர்ச்சையை சந்தித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக இருக்கிறது என்று கூறி அந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கோரியும், கமலை கைது செய்யக்கோரியும் இந்து மக்கள் கட்சி காவல்துறையில் புகார் அளித்தது.

அடுத்து ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..
    — Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2017


இந்நிலையில், மீண்டும் பல அதிரடி கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல் பதிவு செய்துள்ளார். அதில், அமைதியுறாமல் கூச்சலிடுபவர்களுக்கும், அமைதியாக இருக்கும் என் தோழர்களுக்கும் விரைவில் ஒரு அறிவிப்பு வரும்.

நேற்று முளைத்த காளான்கள் போன்றே என் மீதான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் விரைவில் உண்மை என்ற வெயிலில் காய்ந்து போகும். இது போன்ற குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தும் வகையில் அந்த அறிவிப்பு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
    அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்
    — Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2017


    புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி pic.twitter.com/yoFMD8jeJO
    — Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2017


அதாவது புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை செய்தி வெளிவரும் என்று நேற்று பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மனதளவில் உன்னைப் போன்று யாம் மன்னரில்லை தோற்றிறந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று கூறப்பட்டிருந்தது.

தன்னுடைய அடுத்த பதிவு ஒன்றில், தோற்றிருந்தால் நான் போராளி, முடிவெடுத்தால் நான் முதல்வர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது கமலின் அரசியல் பிரவேசத்திற்கான சமிக்ஞையாகவே தெரிகிறது. இதையடுத்து, ‘மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்’ எனவும் கமல் குறிப்பிட்டுள்ளார். இதில், முனைவர் என்று திமுக தலைவர் கருணாநிதியை குறிப்பிடுகிறாரோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இருப்பினும் கமல் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பமான மனநிலையிலேயே பொதுமக்கள் உள்ளதால் நாளைய விடியலில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

எது எப்படியிருப்பினும் நடிகர் கமல், தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கான முன்னோட்டமாகவே இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார் என்பது மட்டும் அரசியலுக்கான அடித்தளம்.

புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை செய்தி வெளிவரும் என்று நேற்று பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மனதளவில் உன்னைப் போன்று யாம் மன்னரில்லை தோற்றிறந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த பதிவு வைரலாகி வருவதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பதிவு வைரலாகி வருவதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரவு: இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ஊழல் தொடர்பான பேச்சுக்கு தமிழக அமைச்சர் தெரிவித்து வரும் கருத்துகள் சிறுபிள்ளைத்தனமானது என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமை அனைத்துக் குடிமக்களுக்கும் உண்டு என்ற அவர், கருத்துச் சுதந்திரம் அனைவருக்குமானது என்றும் கூறியுள்ளார்.

அதேபோல், ஜனநாயகத்தில் அனைவருக்கும் தங்கள் கருத்தை பதிவு செய்யும் உரிமை உள்ளது என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தனது அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை வெளியான உடனே கமல், அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்ல தோன்றவில்லை என்று தனது டுவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.

அவரது தந்தையும் எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து உதயநிதி இவ்வாறு பேசியுள்ளார். கருத்துக்கு பதில் கருத்து தெரிவிக்க முடியுமே தவிர, கருத்து தெரிவிப்பதை யாரும் தடை செய்ய முடியாது என்றும் உதயநிதி கூறியுள்ளார்.

இதனிடையே இதுகுறித்து பேசியுள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேவையற்ற விவகாரம் பெரிதாக்கப்படுவதாக கூறியுள்ளார். கமல் தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறிய கருத்தும் வன்கொடுமையே என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com