சட்டப்பேரவையில் ஒரே நாளில் 25 மசோதாக்கள் நிறைவேறின

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான புதன்கிழமை (ஜூலை 19) 25 சட்ட மசோதாக்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான புதன்கிழமை (ஜூலை 19) 25 சட்ட மசோதாக்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்த நிலையில், அனைத்து மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின.
நிதி ஒதுக்கச் சட்ட மசோதா, தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்ட மசோதா, மின்தூக்கிகளுக்கான விதிமுறைகளில் நகரும் படிக்கட்டுகளையும் கொண்டு வருவதற்கான மசோதா, நீரா பானத்தை இறக்கி விற்க அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா, சொத்து உரிமையாளர், வாடகைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்ட மசோதா உள்பட 25 மசோதாக்கள் பேரவையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவைஅனைத்தும் புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், திருமண பதிவுச் சட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் அபுபக்கர் எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், இஸ்லாம் திருமணங்கள் உரிய சாட்சியங்களுடன் செய்யப்படுகின்றன. குறிப்பாக பள்ளிவாசல் இமாம்கள் போன்றோர் வழியாகச் செய்யப்படுகிறது. அந்தப் பதிவுகளை ஏற்று அரசு அதனை அங்கீகரிக்க வேண்டும்.
இதற்கு பதிலளித்த சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்றார். இதன்பின், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இதேபோன்று, தமிழகத்தில் இருந்து பீர் மதுபானத்தை ஏற்றுமதி செய்வதற்கான சட்ட மசோதாவை மின்சாரம், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தாக்கல் செய்தார். இந்த மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com