சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் குண்டர் சட்டம்: முதல்வர் பழனிசாமி உறுதி

மக்களைத் தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்தால் குண்டர் சட்டம் கண்டிப்பாகப் பாயும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் குண்டர் சட்டம்: முதல்வர் பழனிசாமி உறுதி

மக்களைத் தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்தால் குண்டர் சட்டம் கண்டிப்பாகப் பாயும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பொது, நிதி, பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்:
மாணவி வளர்மதி மீது 6 வழக்குகள் இருக்கின்றன. சேலம் மாநகர் கன்னங்குறிச்சியில் பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகில் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளரும்-இயற்கை பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான வளர்மதி, ஜெயந்தி ஆகியோர் நெடுவாசலில் நடக்கவுள்ள போராட்டத்தில் பங்கேற்குமாறு தூண்டினர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து வளர்மதியை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். வளர்மதி ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டண விஷயத்தில் போராட மாணவர்களைத்தூண்டினார். இதுகுறித்து 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சேலத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசியது, நான்கு சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டது போன்ற சம்பவங்களுக்காகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சி ஏற்படுத்தியதற்காகவும் வளர்மதி மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளாமல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
கண்டிப்பாகப் பாயும்: தமிழகத்தில் யார் மீதும் எடுத்த உடனே குண்டர் சட்டம் போடவில்லை. 6, 7 முறை போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருந்தால் மாநில சட்ட, ஒழுங்கை எப்படி பேணிக் காக்க முடியும்? ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை உண்டு.
ஆனால், மக்களைத் தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்ற போது குண்டர் சட்டம் கண்டிப்பாகப் பாயும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com