கமலின் அறிக்கை எதிரொலி: காணாமல் போன அமைச்சா்களின் இணையதள முகவரிகள்

ஊழல் குறித்த புகார்களை அமைச்சா்களுக்கு மக்களே மின்னஞ்சல் முகவரி (இணையதளம்) வாயிலாக தெரிவிப்பார்கள் என்று கமல் கூறிய நிலையில்,
கமலின் அறிக்கை எதிரொலி: காணாமல் போன அமைச்சா்களின் இணையதள முகவரிகள்


ஊழல் குறித்த புகார்களை அமைச்சா்களுக்கு மக்களே மின்னஞ்சல் முகவரி (இணையதளம்) வாயிலாக தெரிவிப்பார்கள் என்று கமல் கூறிய நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற தொடர்பு விவரங்கள் திடீரென அவர்களின் முகப்பு பக்கத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல் மற்றும் ஆளும் கட்சியினரிடையேயான கருத்து மோதல் முற்றிய நிலையில் அமைச்சர்கள் ஊழல் குறித்த புகார்களை கமல் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தெரிவித்தனா். இதற்கு பதில் அளித்த நடிகா் கமல் மக்களே அரசின் ஊழல் குறித்த புகார்களை மின்னஞ்சல் முகவரி (இணையதளம்) வாயிலாக உங்களுக்கு தெரிவிப்பார்கள் நான் ஏன் இடையில் இருக்க வேண்டும் என்று கூறியதுடன், அமைச்சர் கேட்டுக்கொண்டதற்காக ஆதாரங்களை மக்களே இணையதளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் இந்த அரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள். தற்கால அமைச்சர்களை விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும்” என்று கூறிய கமல்ஹாசன், http://www.tn.gov.in/ministerslist என்ற இணையதள முகவரியையும் வெளியிட்டார்.

இதனையடுத்து கமல் கூறிய சில மணி நேரங்களிலேயே, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ http://www.tn.gov.in இணையதள முகவரியில் சென்று பார்த்த பலரும், அதில் அமைச்சர்களின் எந்த தொடர்பு விவரங்கள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதில், அமைச்சர்களின் இணையதள முகப்பு பக்கங்களில் இருந்த இ-மெயில் முகவரிகள் அழிக்கப்பட்டிருந்தன. அதே வேளையில் தமிழக சட்டப்பேரவை இணையதளத்தில் அமைச்சர்களின் இ-மெயில் முகவரிகள் உள்ளன.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சா் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரது இ-மெயில் முகவரிகளும் அழிக்கப்பட்டுள்ளன். மேலும் ஆட்சியாளா்கள் சிலிரின் தொலைபேசி எண்களையும் காணவில்லை. கமல் கூறியுள்ள கருத்தை தொடா்ந்து அமைச்சர்களின் மெயில் ஐடிகள் அழிக்கப்பட்டுள்ளது கமலுக்கான முதல் வெற்றியாகவும் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும், http://www.assembly.tn.gov.in/15thassembly/honcm.html என்ற இணையதளத்திற்கு சென்று ஊழல் குறித்து மக்கள் கேள்வி எழுப்பலாம். கமல் கூறியதைப் போன்று அமைச்சா்களுக்கு மட்டுமின்றி தொகுதி நடவடிக்கைகளை கவனிக்காமல் உள்ள ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எதிர் கட்சி எம்.எல்.ஏ.க்களிடமும் மக்கள் கேள்வி எழுப்பலாம். 

வினா எழுப்புங்கள் விடை கிடைக்குமா என்று பார்ப்போம்.

கமல் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகள் அதிகம் வரத் தொடங்கியதால் இணையதளத்தில் இருந்து மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி தொடர்பு எண்கள் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com