தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் பழனிசாமி 'திடீர்'  ஆலோசனை!

துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் பழனிசாமி 'திடீர்'  ஆலோசனை!

சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பாக,மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகின்றனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளித்த அதிமுக, இந்த தேர்தலிலும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சீனிவாசன் மற்றும் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com