திமுக ஆட்சிக்கு வரவே முடியாது: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

மக்கள் செல்வாக்கை இழந்த திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
திமுக ஆட்சிக்கு வரவே முடியாது: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

மக்கள் செல்வாக்கை இழந்த திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் வியாழக்கிழமை பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு திரைத்துறையைச் சேர்ந்த யாரையும் மக்கள் ஏற்கவில்லை. கமலஹாசன் சிறந்த நடிகர். நாலாந்தர பேச்சாளர் போல அவர் பொத்தாம் பொதுவாக அரசு மீது குறை கூறுவது சரியல்ல. ஊழல் உள்ள துறையை சுட்டிக்காட்டினால் அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். ரஜினி கூட சிஸ்டம் சரியில்லை என்றார். அது எடுபடவில்லை. அரசை தேவையின்றி சீண்டுவதால்தான் கமலை விமரிசிக்கிறோம். திரைப்பட வாய்ப்பின்றி சின்னத்திரைக்கு வந்துள்ள கமலஹாசன் பொழுதுபோகாமல் அரசியல் பேசிவருகிறார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசு மீது வெளியில் கூறும் குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் நிரூபிக்க முடியவில்லை. நெடுவாசல் உள்ளிட்ட விவசாயிகள் பிரச்னைக்கு திமுகவே காரணம். ஆனால், இப்போது எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் நடத்துவது சரியல்ல. அமைச்சர்களுக்கு முதல்வர் முழுச்சுதந்திரம் அளித்து மக்கள் சேவையாற்ற அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளுமை மிக்க தலைமை இல்லை என்பதால் அனைவரும் அதிமுகவை விமரிசிக்கின்றனர். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் சார்ந்தவர்கள் அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமித்துக் கொள்வர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலின் பகீரத முயற்சி எடுத்தார். அவரது எண்ணம் ஈடேறவில்லை. எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க அவர் குறுக்குவழிகளைக் கையாள்கிறார். காகிதப்பூ மணந்தாலும் மணக்கும். ஆனால், மக்கள் செல்வாக்கை இழந்த திமுக மட்டும் ஆட்சிக்கு வரவே முடியாது. சட்டப்பேரவைக்குள் போதைப் பொருள்களை திமுகவினர் கொண்டுவந்தது சரியல்ல. புதுவை போன்ற மாநிலங்களிலிருந்து அவர்கள் வாங்கி வந்திருக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com