ராம்நாத் கோவிந்துக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ராம்நாத் கோவிந்துக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் வாழ்த்து: ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'குடியரசுத் தலைவராக தாங்கள் தேர்வாகியுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் சட்ட நிபுணத்துவம், ஆளுநராகப் பணியாற்றிய அனுபவம், நாடாளுமன்ற அனுபவம் ஆகியவை நாட்டுக்கு மேலும் சேவை புரியவும், பெருமை சேர்க்கவும் பேருதவியாக இருக்கும். மக்களுக்கு நீங்கள் ஆற்றவுள்ள சேவைகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்' என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வாழ்த்துக் கடிதம்: ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், 'குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் தாங்கள் பணியாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்களுக்காக தனிப்பட்ட முறையில் எனது சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு திமுக சார்பிலும், கருணாநிதி சார்பிலும் வாழ்த்துகள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை நிலைநாட்டி, மதச்சார்பற்ற தன்மை உள்ளிட்ட நாட்டின் பன்முகத் தன்மையைப் போற்றிப் பாதுகாப்பதில் அவர் உறுதியாக இருப்பார் என மனதார நம்புகிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்: இந்தியாவின் 14-ஆவது குடியரசுத் தலைவராக பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அமோக வெற்றிபெற்றுள்ளார். நாட்டின் முதல் குடிமகனாகத் தேர்வு பெற்ற ராம்நாத் தனது அளப்பரிய ஆற்றலாலும், மிகச் சிறந்த சேவையாலும் பேரும் புகழும் பெற வேண்டும்.
ஜி.கே.வாசன்: நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நியாயமாக நடுநிலையோடு செயல்படுவார் என்ற நம்பிக்கை தமாகாவுக்கு இருக்கிறது. அவருக்கு எங்கள் வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com