எம்எல்ஏ ஆறுக்குட்டி யாருடைய நிர்பந்தத்திலும் வெளியேறவில்லை: தம்பிதுரை

எம்எல்ஏ ஆறுக்குட்டி யாருடைய நிர்பந்தத்திலும் வெளியேறவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
எம்எல்ஏ ஆறுக்குட்டி யாருடைய நிர்பந்தத்திலும் வெளியேறவில்லை: தம்பிதுரை

கோவை: எம்எல்ஏ ஆறுக்குட்டி யாருடைய நிர்பந்தத்திலும் வெளியேறவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வி.சி.ஆறுக்குட்டி. முன்னாள்முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டபோது தமிழகத்தில் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக வி.சி.ஆறுக்குட்டி, ஓ.பி.எஸ். அணியில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், விளாங்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கூறுகையில்,
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. அப்போது ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து தொண்டர்களிடமும், தொகுதி மக்களிடமும் கருத்துகளைக் கேட்டுத் தமிழகத்தில் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்தேன்.

இந்நிலையில், கொடிசியா வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஜூலை 29-இல் சிறப்பாக நடத்துவதற்காக அனுமதி பெற்று அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.

ஆனால், இந்நிகழ்ச்சி குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு என்னை அழைக்காமல் புறக்கணித்தது குறித்து, ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைப்பது குறித்து பலமுறை ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தும் அதற்கான பதில் அவரிடமிருந்து கிடைக்கவில்லை. அதனால், ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகுகிறேன்.

மேலும், என்னை நம்பி வாக்களித்த தொகுதி மக்களுக்கு நான் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்ய வேண்டும். அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தால் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து தொண்டர்கள், தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு ஓரிரு நாள்களில் முடிவை அறிவிப்பேன் என்றார்.

இந்நிலையில், இன்று கோவை விமான நிலையத்தில் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அனைத்து எம்எல்ஏக்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஆதரித்து வருகிறன்றனர்.

ஓ.பி.எஸ் அணியிலிருந்த கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி யாருடைய நிர்பந்தத்தாலும் அங்கிருந்து வெளியேறவில்லை. ஜெயலலிதா, எம்ஜிஆரின் கட்சியை காப்பாற்றுவதன் நோக்கம்தான் ஆறுக்குட்டி வெளியேறியதை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

மேலும், எந்த நடிகர்களும் அரசியலுக்கு வரலாம் என தம்பிதுரை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com