சிறு வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து 5 ஆண்டுகள் வரை அவகாசம்: எஸ்.குருமூர்த்தி வலியுறுத்தல்

சிறு வியாபாரிகள் ஜிஎஸ்டி நடைமுறையைப் பின்பற்ற 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை அவகாசம் கொடுத்தால், நாட்டின் வளர்ச்சிக்கு அது வழிகாட்டும் என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி குறித்து தமிழில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற  துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, டை சென்னை அமைப்பின் தலைவர் நாராயணன்
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி குறித்து தமிழில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, டை சென்னை அமைப்பின் தலைவர் நாராயணன்

சிறு வியாபாரிகள் ஜிஎஸ்டி நடைமுறையைப் பின்பற்ற 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை அவகாசம் கொடுத்தால், நாட்டின் வளர்ச்சிக்கு அது வழிகாட்டும் என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.
''டை' சென்னை அமைப்பு சார்பில், கோவையைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ஜி.கார்த்திகேயன் தமிழில் எழுதியுள்ள ஜி.எஸ்.டி. புத்தக வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நூலை துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வெளியிட்டுப் பேசியது:
ஜி.எஸ்.டி. நீண்ட நெடுங்கால வரவேற்கக்கூடிய திட்டம். இதனால், பல கஷ்டங்கள் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது. இந்த வரியை ஏற்று, இதற்குள் வரமுடியாதவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஜிஎஸ்டி போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எந்த அளவு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்ற கேள்விக்குறி இருக்கத்தான் செய்யும்.
லஞ்சம், ஊழல் தவிர்ப்பு...ஒரு பொருளை ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும்போது ஆங்காங்கே ஆவணங்களைக் காட்டி வரி செலுத்தும் சுமை ஜிஎஸ்டி மூலம் தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லஞ்சம், ஊழல் தவிர்க்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் (ஜிஎஸ்டி) பதிவு செய்யவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் நிலை உள்ளது. ஆண்டுக்கு ரூ.4 கோடி அல்லது ரூ.5 கோடி வர்த்தகம் செய்வோருக்கு, ஜிஎஸ்டி-லிருந்து அவகாசம் அளிக்க வேண்டும். இதற்குரிய முயற்சியைத் தாம் செய்யப் போவதாக குருமூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், 'டை சென்னை' அமைப்பின் தலைவர் ஆர்.நாராயணன், முதலீட்டாளர் வி.சங்கர், பண்ணாரியம்மன் குழுமத் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியன், நூல் ஆசிரியர் ஜி.கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com