பதிப்பாளர்கள், படைப்பாளர்களை கெளரவிப்பது நம் கடமை: நீதிபதி ஆர்.மகாதேவன்

தமிழுக்கு தொண்டாற்றும் பதிப்பாளர்களையும், படைப்பாளர்களையும் கெளரவிப்பது நம் அனைவரின் கடமை என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்தார்.

தமிழுக்கு தொண்டாற்றும் பதிப்பாளர்களையும், படைப்பாளர்களையும் கெளரவிப்பது நம் அனைவரின் கடமை என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டை நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 21) மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது:
கிறிஸ்தவ பாதிரியார்களான சீகன் பாலும், வீரமாமுனிவரும் அற்புதமான தமிழாக்கங்களை தங்களுடைய மொழிக்கு கொண்டு சென்றதுடன், தமிழின் மேன்மையை உலகறியச் செய்தனர். இதேபோன்று, மேலை நாடுகளின் தாக்கத்தால் வசீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் அந் நாடுகளின் அற்புதமான படைப்புகளை இந்த மண்ணிற்கு கொண்டு வந்து சேர்த்தனர். இவ்வாறு ஆண்டாண்டு காலமாய் தமிழுக்கு தொண்டாற்றி வரும் பதிப்பாளர்களையும், படைப்பாளர்களையும் கெளரவிப்பது நம் அனைவரின் கடமையாகும்.
புத்தகங்களை வாசிப்பதென்பது ஏதோ பொழுதுபோக்கு அம்சமாக இல்லாமல், அதனை நாம் வாழ்க்கையின் சாரம் என கொள்ள வேண்டும் என்றார் நீதிபதி மகாதேவன்.
அதைத்தொடர்ந்து பதிப்பாளர்கள் அருணோதயம் அருணன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் இரா.முத்துக்குமாரசாமி, இந்து பதிப்பகத்தின் வி.கரு.ராமநாதன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், மருத்துவ நூல் சாதனையாளர் என்ற சிறப்பு விருது முத்துச் செல்லக்குமாருக்கும் வழங்கப்பட்டது.
தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுவின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றார். எஸ்.வைரவன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com