ஆடி அமாவாசை:  புதுவை கடற்கரையில் தீர்த்தவாரி, முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் ஏராளமானோர் ஞாயிற்றுக்கிழமை தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை:  புதுவை கடற்கரையில் தீர்த்தவாரி, முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புதுச்சேரி: ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் ஏராளமானோர் ஞாயிற்றுக்கிழமை தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மேலும் இதன் ஒரு பகுதியாக கடல் தீர்த்தவாரியும் நடைபெறறது.

அமாவாசை நாள்களில் மூதாதையரை நினைத்து விரதம் இருப்பது வழக்கம். அதில் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை மிக சிறப்பு வாய்ந்ததாக
கருதப்படுகிறது. அவற்றில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை முக்கிய இடம் வகிக்கிறது.

குறிப்பாக ஆடி  அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது குடும்பத்திற்கு நல்லது என்பதாலும்,
அதேபோல் இதுவரை திதி கொடுக்க மறந்தவர்கள், இந்தஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த பலனை கொடுக்கும்  என்பதால் பலர்  தர்ப்பணம் கொடுத்தனர்
.
இதனைத்தொடர்ந்து இரவு காலை முதலே  கடற்கரை காந்தி சிலை, குருசுக்குப்பம் கடற்கரைப்பகுதி, வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரை, திருக்காஞ்சி, முத்தியால்பேட்டையிலுள்ள செங்குந்தர் மரபினர் பூந்தோட்டம் உள்ளிட்ட பல இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர் .

மணக்குள விநாயகர், ஈஸ்வரன், வரதராஜபெருமாள், காமாட்சி அம்மன், தண்டு மாரியம்மன், முத்துமாரியம்மன், நாகமுத்துமாரியம்மன், சிவசுப்பிரமணியர், வரசித்தி விநாயகர் உள்பட பல்வேறு கோயில்களிலிருந்து கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட உற்சவ மூர்த்திகள் கடலில் நீராடினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள் நீண்ட வரிசையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  இதில் திரளான பகதர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருக்காஞ்சியிலும் ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை என்பதால் அமாவாசைக்கு திதி கொடுக்கும் சிறப்பு தலமாக விளங்கும் திருக்காஞ்சி கோயிலில் இறைவனுக்கு தனி அபிஷேகமும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

அமாவாசை நாள்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், எதிர்கால சந்ததியினர் வளமாக வாழ்வார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com