டிஐஜி ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்: எம்எல்ஏ வெற்றிவேல் பேட்டி

அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை கர்நாடக டிஐஜி டி.ரூபா
டிஐஜி ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்: எம்எல்ஏ வெற்றிவேல் பேட்டி


சென்னை: அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை கர்நாடக டிஐஜி டி.ரூபா நிறுத்தவில்லை என்றால் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக எம்.எல்.ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.

பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு சசிகலாவுக்கு தனி அறை வழங்கப்பட்டுள்ளது. அதில் சசிகலா அமருவதற்கு ஓர் இருக்கையும், மேஜையும், அதன் எதிரில் பார்வையாளர்கள் அமருவதற்கு நான்கு இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. இது சட்ட விதிமீறலாகும்.

சசிகலாவுக்கு முக்கியப் பிரமுகர்களுக்கான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சசிகலாவின் நடமாட்டத்தையும், பார்வையாளர்களைச் சந்திப்பதைக் கண்காணிக்கப் பொருத்தப்பட்டிருந்த 7, 8-ஆம் எண் கொண்ட சிசிடிவி கேமரா பதிவுகள் சேமிக்கப்படவில்லை. சிறைக்குச் சென்றபோது தன் முயற்சியால் எடுக்கப்பட்ட காணொலிக் காட்சியின் பதிவுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

சிறை விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஐஜி டி.ரூபா புகார் தெரிவித்திருந்தார்.

மத்திய சிறையில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக விசாரிக்கும் முன்பு டிஐஜி ரூபா வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார்.

இந்நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் யாருமே இல்லாத அறையை காட்டி சசிகலாவின் அறை என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், டிஐஜி டி.ரூபா கூறியுள்ள எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை என்று தெரிவித்தவர், ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடர வழக்குரைஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை படி அவர் சொந்த உடை அணிந்து கொள்ளலாம் எனவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com