தானமாக தருவதாக அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கிணற்றை விற்பனை செய்தார் ஓ.பன்னீர்செல்வம்!

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியின் குடிநீர் தேவைக்காக தனது கிணற்றை இலவசமாக தருவதாக அறிவித்த முன்னாள்
தானமாக தருவதாக அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கிணற்றை விற்பனை செய்தார் ஓ.பன்னீர்செல்வம்!


பெரியகுளம்:  பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியின் குடிநீர் தேவைக்காக தனது கிணற்றை இலவசமாக தருவதாக அறிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த கிணறு மற்றும் நிலத்தை விற்பனை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவிக்குச் சொந்தமான பாசனக் கிணறு மற்றும் நிலம், கடந்த 12 ஆம் தேதி லட்சுமிபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக இலவசமாக தருவதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மனைவிக்குச் சொந்தமான கிணறு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக லட்சுமிபுரம் கிராம கமிட்டியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் பிரிவினருக்கும்-கிராம கமிட்டியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் மனைவிக்குச் சொந்தமான பாசனக் கிணறு, நிலம் விவகாரம் தொடர்பாக நேற்று சனிக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்தை அக்கிராமப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.

அப்போது, லட்சுமிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனைவி பெயரில் உள்ள நிலம் மற்றும் பாசனக் கிணறுகளை கிராம மக்களுக்கு விற்க அவர் ஒப்புதல் தெரிவித்துள்ளதால், நிலத்தை கிரையம் பெறுவதற்கு வாய்ப்பாக சம்பந்தப்பட்ட நிலம் மற்றும் கிணறுகளுக்கான ஆவணங்களை பார்வையிட வேண்டும் என்று ஆட்சியரிடம் கேட்டதற்கு. அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக ஆட்சியர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com