மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமின்

மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க  ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமின்

மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க  ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவருக்கு வரும் 26-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கதிராமங்கலம் போராட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களுக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜெயராமனின் தந்தை தங்கவேலு (97) உடல்நலக்குறைவால் மயிலாடுதுறையில் காலமானார். இதைடுத்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜாமின் கேட்டு ஜெயராமன் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜெயராமனுக்கு வரும் 26-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com