தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க பாமக தொடர்ந்து போராடும்: ராமதாஸ்

"தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க பாமக தொடர்ந்து போராடும் என்று என அக்கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார்.

"தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க பாமக தொடர்ந்து போராடும் என்று என அக்கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார்.

பாமகவின் 29-ஆவது ஆண்டு விழாவையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியது :
நீட் போன்ற பிரச்னைகளால் சமூகநீதி தற்போது முற்றிலும் வீழ்த்தப்பட்டுள்ளது. எனவே சமூகநீதியை வலியுறுத்தி செப்டம்பர் 17-ஆம் தேதி விழுப்புரத்தில் மாநாடு நடத்த உள்ளோம். கடலூர், நாகையில் பெட்ரோலிய ரசாயனப் பூங்கா அமைக்க மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் அனுமதியின்றி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால் மேற்கு வங்கத்தில் எப்படி நந்திகிராமம், சிங்கூரில் போராட்டம் ஏற்பட்டதோ, அப்படி கடலூர், நாகையில் ஏற்படும். தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க பாமக எந்த எல்லைக்கும் செல்லும் என்றார் ராமதாஸ்.
நீட் தேர்வுக்கு எதிராகப் போராட வேண்டும்: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசியது : ஜல்லிக்கட்டுக்குப் போராடியது போன்று நீட் தேர்வுக்கு 'எதிராகவும் இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர் போராட வேண்டும். நீட் தேர்வு வருவதற்கு மத்திய அரசு தான் காரணம்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டி உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசினேன். அதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து தற்போதுதான் என் கவனத்துக்கு வருகிறது. உடனடியாக நான் அந்த மசோதா குறித்து ஆய்வு செய்கிறேன் என்றார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் முறையிட்ட போது, "என்னிடம் அந்த மசோதா வந்தால் நிச்சயம் நான் நல்ல முடிவை உடனடியாக எடுக்கின்றேன். காரணம் இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை நான் நன்கு அறிவேன்' என்று என்னிடம் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசோ, தமிழக சட்டப்பேரவை அனுப்பிய அந்த மசோதாவை மத்திய சுகாதாரம், மனிதவள மேம்பாட்டுத் துறைகளுக்கு அனுப்பி மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை என்றார் அன்புமணி.
பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்குரைஞர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com