தொடங்கியது பொதுப் பிரிவு பி.இ. கலந்தாய்வு

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 9 பேர் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
தொடங்கியது பொதுப் பிரிவு பி.இ. கலந்தாய்வு

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 9 பேர் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். ஒருவர் மட்டும் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவர்களுக்கு உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.

பிளஸ் 2 தொழில் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் ஆகியோருக்கான பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கு மொத்தம் 1.75 லட்சம் பி.இ. இடங்கள் உள்ளன. முதல் நாள் மட்டும் காலை 10 மணிக்கு சேர்க்கை தொடங்கப்பட்டது.
இதில், பட்டியலில் முதலிடம் பிடித்த தஞ்சையைச் சேர்ந்த பி.ஸ்ரீராம் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. கணினி அறிவியல் துறையையும் இரண்டாம் இடம் பிடித்த எம். ஹரி விஷ்ணு, மின்னியல் மின்னணுவியல் துறையையும் மூன்றாம் இடம் பிடித்த வி.சாய்ராம், கணினி அறிவியல் துறையையும் தேர்வு செய்தனர்.
முதல் பத்து பேரில் 9 பேர் கிண்டி பொறியியல் கல்லூரியிலேயே சேர்க்கை பெற்றுள்ளனர். பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்த வி.எஸ். பிரீத்தி மட்டும் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. கணினி அறிவியல் பிரிவைத் தேர்வு செய்தார்.
பொதுப் பிரிவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கடைசி கலந்தாய்வு மாலை 6 மணிக்குத் தொடங்கியது. திங்கள்கிழமையிலிருந்து (ஜூலை 24) முதல் பிரிவு சேர்க்கை காலை 7 மணிக்குத் தொடங்கி மொத்தம் 9 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. கடைசிப் பிரிவு இரவு 7 மணிக்குத் தொடங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com