தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும்

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வலு குறைந்து காணப்படுவதால் தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வலு குறைந்து காணப்படுவதால் தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
தென்மேற்கு பருவமழை தமிழகம், கேரளத்தில் வலு குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை குறைந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. மழை எங்கும் பதிவாகவில்லை.
ஜூன் 1 -ஆம் தேதி முதல் ஜூலை 24 -ஆம் தேதி வரை 100 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 28 சதவீதம் குறைந்து 70 மி.மீ. மழையே பெய்துள்ளது. இதே காலகட்டத்தில் 2014 -ஆம் ஆண்டு 11 சதவீதம், 2015 -ஆம் ஆண்டு 7 சதவீதம், 2016 -ஆம் ஆண்டு 3 சதவீதம் மழை குறைவாகப் பெய்திருந்தது.
தொடர்ந்து நான்கு நாள்களுக்கு...தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு அதாவது ஜூலை 28 -ஆம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களில் இயல்பு வெப்ப நிலையைக் காட்டிலும் 2 முதல் 3 டிகிரியும், உள்மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரியும் வெப்பம் அதிகரித்துக் காணப்படும்.
ஜூலை 29 முதல்...மேகங்கள் உருவாகாமல் காணப்படுவது, கடற்காற்று நிலப்பரப்புக்குள் தாமதமாக நுழைவது, காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவது உள்ளிட்டவை வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதற்கான காரணங்கள் ஆகும். ஜூலை 29 -ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com