தமிழகத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்வு: பயணிகள் அதிருப்தி

தமிழகத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் அரசாணை இல்லாமல், அரசின் அறிவுறுத்தலின் படி, போக்குவரத்து கழகங்களே கட்டண உயர்வு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. டீசல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் காணப்படும் கட்டண உயர்வு விரைவிலேயே தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிகிறது. இதனிடையே பேருந்து கட்டண உயர்வு சாமானியர்களின் மீது அதீத பாரத்தைச் சுமத்தும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com