பிரதமர் வருகை: மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 27) ராமேசுவரம் செல்லும் வழியில் மதுரை வருவதையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 27) ராமேசுவரம் செல்லும் வழியில் மதுரை வருவதையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் நினைவு தினம் வரும் 27 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவாக ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திரமோடி வருகிறார்.
அவர் 27 ஆம் தேதி காலை தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் சென்று அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்ல உள்ளார்.
இதையொட்டி மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டோ எம்.என்.ஷா தலைமையில் மதுரை விமான நிலையத்திலும், மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையத்தை சுற்றிலும் 24 மணிநேரமும் வாகனத் தணிக்கை மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com