அதிமுக அணிகள் சர்க்கஸ் கூடாரம்: மு.க. ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக அணிகள் சர்க்கஸ் கூடாரம் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 
அதிமுக அணிகள் சர்க்கஸ் கூடாரம்: மு.க. ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக அணிகள் சர்க்கஸ் கூடாரம் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று சென்னையில் கைதானார். இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவரை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். 

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க. ஸ்டாலின், நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்கள் பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை. பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து முதல்வர் விளக்கம் தரவில்லை. குட்கா, வருமான வரி சோதனை உள்ளிட்ட விவகாரத்தில் முதல்வர் தலைக்கு மேல், கத்தி தொங்குகிறது. 

மேலும் நீட் தேர்வில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக தமிழக அரசு கூறுவது கபட நாடகம் எனக் கூறிய ஸ்டாலின் அதிமுக அணிகனை சர்க்கஸ் கூடாரம் என்று விமர்சித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com