டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தயார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2 ஏ தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2 ஏ தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
குரூப் 2ஏ பிரிவில் வரும் நேர்காணல் இல்லாத பதவிகள் அடங்கிய 1,953 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, வரும் 6 -ஆம் தேதி (ஆகஸ்ட் 6) டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in  வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு (யூஸர் நேம்) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்ப எண், தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய வங்கிக் கிளை / அஞ்சலக முகவரி ஆகியவற்றை பூர்த்தி செய்து அளித்திடலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com