நீட் தேர்வு விவகாரம்: புதுவையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 120 பேர் கைது

நீட் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீட் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பாஜக அரசும், முந்தைய காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கை, ஊழல் மலிந்த காங்கிரஸ் அரசுக்கு மாற்றாக செயல்பட வில்லை. மாறாக முந்தைய ஆட்சியாளர்களின் கொள்கைகளை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

எம்பிபிஎஸ்,பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் தகுதி மற்றும நுழைவு தேர்வு நீட் முறையை மத்திய பாஜக அரசு
கட்டாயப்படுத்தியுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

2016 -17 ஆம் கல்வி ஆண்டில் புதுச்சேரியை சேர்ந்த 4196 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள் இதில் 1568 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளனர்.
சிபிஎஸ்சி மாணவர்கள்  545 முதல் 300 வரையிலான மதிப்பெண்களையும், தனியார் பள்ளி  மாணவர்கள் 400 முதல் 200 வரையிலும் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் குறைவான மதிப்பெண்களை மட்மே பெற்றள்ளனர். இதன் மூலம் ஏழை, எளிய மாணவரகளின் நலன் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 நிகர்நிலை மருத்துவ  கல்லூரிகளை அரசு ஒதுக்கீட்டாக பெறப்பட்டு வந்த இடங்களையும் மத்திய அரசு பறித்து விட்டது.

புதுச்சேரி  மாநில உரிமை மற்றும் எழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பை பறிக்கும் நீட் தேர்வு முறையிலிருந்து புதுச்சேரிக்கு விலக்கு
கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 

ராஜா திரையரங்கில் இருந்து நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற மார்க்சிஸ்ட் கட்சியினரை தலைமை தபால் நிலையம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கே கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள் கண்டனவுரையாற்றினார். பிரதேசக் குழு
உறுப்பினர்கள் முருகன், ராமச்சந்திரன், பிரபுராஜ், உலகநாதன், தமிழ்ச்செல்வன், மதிவாணன், சரவணன், ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
முறறுகை போராட்டத்தில் ஈடுபட்ட 120-க்கு மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com