புதுவையின் முதல் ரயில்வே மேம்பாலம்: திறந்து வைத்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி 100 அடி சாலையில் ரூ.40 கோடி செலவில் கட்டப்பட்ட முதல் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர்நாராயணசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
புதுவையின் முதல் ரயில்வே மேம்பாலம்: திறந்து வைத்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி 100 அடி சாலையில் ரூ.40 கோடி செலவில் கட்டப்பட்ட முதல் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர்
நாராயணசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை போன்றவற்றில் 100 அடி சாலை,
அரும்பார்த்தபுரத்தில் ரயில்வே லெவல் கிராசிங்குகள் உள்ளன. இந்நிலையில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டு வந்தது. இதைக் கருத்தில் கொண்டு இரு இடங்களிலும் மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

கடந்த 2013-14-ம் ஆண்டு மத்திய சாலை நிதி, ரயில்வே நிதியில் இருந்து மொத்தம் ரூ.40 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணிகள் 100 அடி சாலையில் தொடங்கியது. பாலத்தின் மொத்த நீளம் 1207 மீ ஆகும். இந்நிலையில் பாலத்தில் 835.9 மீ நீளமுள்ள கிழக்குப் பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் ஏ.பாஸ்கர், ஜே.ஜெயபால், அரசு செயலர் மிகிர் வரதன் முன்னிலை வகித்தனர்.

தில்லிபிரதிநிதிஜான்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏகேடி.ஆறுமுகம், நீலகங்காதரன், தேவதாஸ் மற்று அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியினர்,
ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

பாலத்தை திறந்து வைத்து முதல்வர் நாராயணசாமி காரில் சென்று பாலத்தை பார்வையிட்டார். இதன் மூலம் கடலூர் செல்லும் பொதுமக்கள், வாகனங்களுக்கு
ஒரு புறம் சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திறப்பு விழாவுக்கு பின் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
புதிய பாலம் திறந்ததன் மூலம் கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை, திருவண்ணாமலைக்கு வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது மேம்பாலத்தின் ஒரு வழி மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப் பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் பணிகள் இன்னும் 4 மாத
காலத்திற்குள் முடிக்கப்பட்டு பாதை திறக்கப்படும்.

அப்பகுதியில் வில்லியனூர் செல்லும் புறவழிச்சாலை பணிகள் முடிவடைய வேண்டும். அதை துரிதமாக செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் ஈடுபட்டுள்ளார். இறுதிக் கட்டத்தில் அப்பணிகள் உள்ளன. புதுவையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com