பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் ஆஜர்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் ஆஜர்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தன்னுடைய சகோதரரின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு, சென்னை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது.
அதன்படி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், 2007 }இல் சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கெüதமன், சன் டிவி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது, தில்லி சிபிஐ போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரிஷியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கெüதமன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கடந்த 2015 }ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்தனர்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில், தில்லி சிபிஐ போலீஸில் விசாரணைக்காக அவர் நேரில் ஆஜரானார்.
இதனிடையே இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு 2016 டிசம்பர் 8 }ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவுக்காக, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது தனிச் செயலாளர் கெüதமன், சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி, பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற அதிகாரிகள் பிரம்மநாதன், வேலுச்சாமி ஆகிய 6 பேரும், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்கள். ஆனால், கலாநிதி மாறன் தரப்பில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்று நீதிபதி நடராஜன் வெள்ளிக்கிழமை ஒருநாள் அவர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தார்.
இதனையடுத்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் வழக்கறிஞர்கள் வாதிட்டபோது, "சிபிஐ அளித்த குற்றப்பத்திரிகை நகலில் 29 -க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தெளிவாக இல்லை. எனவே, அவற்றை முறையாக வழங்க சிபிஐ தரப்புக்கு உத்தரவிட வேண்டும்' என கோரினர். இதனையடுத்து நீதிபதி நடராஜன், தெளிவான ஆவணங்களை வழங்க சிபிஐ}க்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11 }ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கக் கோரி கலாநிதி மாறன் தரப்பில் மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி சிபிஐ}க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com