திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வருவாய்க் கோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய்க் கோட்டமும், ஜமுனாமரத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டமும் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி
திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்ச
திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்ச

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய்க் கோட்டமும், ஜமுனாமரத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டமும் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி
கே.பழனிசாமி, எம்ஜிஆர் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:
எம்ஜிஆர் வாழ்க்கையில் கடைப்பிடித்த ஒழுக்கம், பண்பாடு, உழைப்பால் உயர்ந்த வரலாற்றை இந்தத் தலைமுறை இளைஞர்கள், குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி வருகிறது.
உயர் கல்வித் துறையில் பல அதிரடியான திட்டங்களை எம்ஜிஆர் கொண்டு வந்தார். தமிழகத்தில் 100 ஆண்டுகளில் வெறும் 4 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நிறுவப்பெற்றன.
தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்ற 11 ஆண்டுகளில் 7 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. தமிழக மக்கள் மீது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். திருவண்ணாமலை நகரை தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் ஜெயலலிதா ஆன்மிக நகராக உருவாக்கினார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு: தமிழக அமைச்சர்களும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர், உள் துறை அமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ரூ.300 கோடியில் 2,065 ஏரிகளில் குடி மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திமுக ஆட்சியில் தூர்வாரி இருக்கலாமே...: கடந்த மே 7}ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை கோதண்டராமர் கோயில் குளத்தில் எதிர்கட்சித் தலைவர் தூர்வாரும் பணியில் ஈடுபடுகிறார். ஏரி, குளங்களை அவர்களுடைய ஆட்சிக் காலத்திலேயே தூர்வாரி இருக்கலாமே? சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி, எருமைப்பட்டி ஊராட்சி, கச்சராயன் குட்டையில் வண்டல் மண் அள்ள 33 விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, விவசாயிகள் வண்டல் மண்ணை எடுத்து தங்கள் நிலத்தின் வளத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எதிலும் ஆதாய நோக்கில் அரசியல் செய்வதற்கென்றே உள்ள ஒருவர், 33 விவசாயிகள் தூர்வாரி, வண்டல் மண்ணை அள்ளிய பிறகு அந்தக் குட்டையை தாங்கள் தூர்வாரியதாக அறிக்கை விடுகிறார்.
விவசாயிகளின் வாழ்க்கையில் அரசியல் செய்ய வேண்டாம்: அரசியல் செய்ய எவ்வளவோ இடங்கள் உள்ளன. ஏற்கெனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டு பருவ மழையை சேமித்து வைக்க குடிமாரமத்துப் பணிகளை செய்து வரும் விவசாயிகளின் வாழ்க்கையில், அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன்.
ஆரணியில் புதிய வருவாய் கோட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 2 வருவாய் கோட்டங்கள் மட்டுமே இருந்தன.
தற்போது நிர்வாகப் பயன்பாட்டுக்காகவும், பொதுமக்கள் வசதிக்காகவும் ஆரணி, போளூர், கலசப்பாக்கம், புதிதாக அமையவுள்ள ஜமுனாமரத்தூர் வட்டங்களை உள்ளடக்கி ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு 3}ஆவது புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என்றார் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com