புலிகள் சரணாலயங்களைக் கண்காணிக்கும் பணியில் ஆளில்லா விமானங்கள்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தை கண்காணிக்க கொண்டு வரப்பட்ட 5 ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புலிகள் சரணாலயங்களைக் கண்காணிக்கும் பணியில் ஆளில்லா விமானங்கள்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தை கண்காணிக்க கொண்டு வரப்பட்ட 5 ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 5 ஆளில்லா விமானங்களில் 3 பெரியதாக இருக்கும், அவற்றில் ஒன்று 12 கிலோ எடை வரை இருக்கும். மேலும், 2 ஆளில்லா விமானங்கள் சிறிய வகையிலானவை. அவை 6 கிலோ எடையுடன் இருக்கும்.இந்த ஆளில்லா விமானங்கள் 40 கி.மீ. தூரத்துக்கு வானில் பறந்தபடியே கண்காணிப்பை மேற்கொள்ளும்.
இந்த வகை விமானங்களை தொடர்ந்து வானில் இடைவேளை இல்லாமல் பறக்க வைக்க முடியும்.
இப்போது வாரத்தில் 5 நாள்கள் இந்த ஆளில்லா விமானங்கள், புலிகள் காப்பக பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என சத்தியமங்கலம் வனச்சரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள 13 புலிகள் சரணாலயங்களில் இந்த ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை, களக்காடு} முண்டந்துறை என 4 புலிகள் சரணாலயங்கள் உள்ளன.
இயக்குவதற்கான பயிற்சி: ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்குகிறது.

இந்த ஆளில்லா விமானங்கள், புலிகள் சரணலாயத்தில் உள்ள வனப் பாதுகாவலர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்குத்தான் இதனை இயக்குவதற்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள்
சரணாலயம் தமிழக்தில் மிகப்பெரியதாகும். எனவே, இந்த ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியும், ஒத்திகையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.
முதல் முறையாக...: இந்தியாவில் முதல் முறையாக வனப் பாதுகாப்புக்காகவும் வனக் குற்றங்களை தடுக்கவும் மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தில் இரண்டு ஆளில்லா விமானங்கள் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
உலகளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்நியோ காடுகளிலும் நேபாளம், சீனா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் சில மேற்கத்திய நாடுகளிலும் வனங்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டு வகை: பொதுவாக இரண்டு வகையான ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்படுகின்றன. அவை வேன்கார்டு (யஹய்ஞ்ன்ஹழ்க்) விமானம் , கைப்பி (இஹண்ல்ஹ்) விமானம் ஒன்றும் என இரு விமானங்களாகும்.
இவை அமெரிக்காவின் கன்சர்வேஷன் டிரோன்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்விட்சர்லாந்தின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. ஒரு மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானங்களில் வேன்கார்டு 40 கிலோமீட்டரும், கைப்பி 20 கிலோமீட்டரும் தொடர்ந்து வானில் பறக்கக்கூடியவை. இவை ஒவ்வொன்றும் ரூ. 5 லட்சம் முதல் 20 லட்சம் மதிப்பு கொண்டவை.
பணிகள் என்னென்ன ?: மனிதர்கள் புக முடியாத காடுகளை ஆய்வு செய்தல், சந்தனக் கட்டைகள், செம்மரக்கட்டை உள்ளிட்ட வனக் கொள்ளையைத் தடுத்தல், வேட்டைத் தடுப்பு, காட்டுத் தீ தடுப்பு, வன விலங்குகளை கண்காணித்தல், நீர் நிலைகளைக் கண்காணித்தல், வனங்கள் குறித்த வரைபடங்களை தயாரித்தல், வனங்கள் விரிவாக்கம் மற்றும் அழிவுகளின்போது அவற்றை அளவிடுதல், அழியும் தருவாயில் உள்ள வன உயிரினங்கள் மற்றும் மரம், தாவரங்களைக் கண்டறிந்து பாதுகாத்தல், வன விலங்கு கணக்கெடுப்பு, அவற்றின் பழக்க வழக்கங்களை கண்காணித்தல் போன்ற பணிகள் இவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தை பொருத்தவரை யானை வலசை பாதைகளை கண்டறிந்து முறைப்படுத்துதல், மலை உச்சிகளில் வாழும் வரையாடுகளை கணக்கெடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய தனி கவனம் செலுத்தப்படவுள்ளதாக தமிழக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com