நாளை அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் அழைப்பு!

நாளை அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் அழைப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அஇஅதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாயக்கிழமை மாலை 5 மணியளவில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுக-வின் அனைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தலைமை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், முதன்முறையாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தினகரன் அணி, ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என்று செயல்படுகிறது.

இந்நிலையில், இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் இதர அணியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இக்கூட்டத்தில் கட்சியை ஒன்றுபடுத்துவது, ஆட்சியை தக்க வைப்பது உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக அம்மா அணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com