மணல் கொள்ளைக்கு நடவடிக்கை இல்லாவிடில் 3 மாவட்ட ஆட்சியர்கள் மீது விரைவில் வழக்கு

மணல் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிடில் தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் மீது விரைவில் வழக்குத் தொடுக்கவுள்ளேன் என்றார் பாமகவைச் சேர்ந்த

மணல் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிடில் தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் மீது விரைவில் வழக்குத் தொடுக்கவுள்ளேன் என்றார் பாமகவைச் சேர்ந்த தருமபுரி தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர் அளித்த பேட்டி:
காவிரி பிரச்னை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒகேனக்கலில் இருந்து பூம்புகார் வரை பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறோம். இதில், கல்லணையிலிருந்து வந்தபோது சுக்காம்பார் என்ற கிராமத்தில் ஆயிரக்கணக்கான லாரிகள் நின்றன. அங்கு கொள்ளிடம் ஆற்றுக்குள் 2 கி.மீ. தொலைவுக்கு கிட்டத்தட்ட 10 அடி உயரத்துக்குச் சாலை போடப்பட்டிருக்கிறது. ஆனால், ஆற்றுக்குள் சாலை அமைக்கக் கூடாது என சட்டமே உள்ளது. குவாரியில் இயந்திரம் வைத்து 30 } 40 அடிக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. இது சட்டத்துக்கு எதிரான செயல். குவாரிக்கு மாவட்ட ஆட்சியர்தான் அனுமதி கொடுக்கிறார். விதிகளுக்குள்பட்டு மணல் அள்ளப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டாமா? இதுதொடர்பாக இன்னும் இரு நாள்களுக்குள் தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்கள் மீது எனது பெயரிலேயே வழக்குத் தொடுக்க உள்ளேன்.
சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடக்கிறது. இதை சட்ட ரீதியாக அணுக உள்ளோம். மக்களைத் திரட்டியும் போராட உள்ளோம் என்றார் அன்புமணி ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com