மு.க.ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
மு.க.ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்த, கொண்டுவரப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கும் வகையில் ஜூன் 11-ஆம் தேதி திருச்சியில் விவசாயிகளுக்கான நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஜூன் 15-ஆம் தேதி மதுபானத்துக்கு எதிராக சென்னையில் பேரணி நடைபெறுகிறது.
மாட்டிறைச்சி பிரச்னையை தவறாக சித்தரிக்கின்றனர். இந்த விவகாரத்தில் சென்னை ஐஐடியில் நடந்த பிரச்னை இரண்டு மாணவர்களுக்கிடையே நடந்த பிரச்னை. அதற்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை.
மாட்டிறைச்சிக்கான திமுக சார்பில் நடந்த போராட்டத்தின்போது, மீண்டும் மெரினா புரட்சி வெடிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படியெனில் மெரினா போராட்டத்தின் பின்னணியில் இருந்தது யார்? மாடுகளை வீட்டின் தெய்வமாக கருதியதாக மெரினா போராட்டத்தில் குறிப்பிட்டவர்கள், மாடுகளை வெட்டுவதற்கு எதிராக போடப்பட்ட சட்டத்தை எதிர்த்து மெரினாவில் போராடுவார்களா? அவரது எண்ணம் எல்லாம், மத்திய மாநில அரசுகளின் ஸ்திரத்தன்மை கெடவேண்டும், அப்போதுதான் முதல்வர் ஆகமுடியும் என பகல் கனவு காண்கிறார். ஒரு போதும் அது பலிக்காது.
உதய் திட்டத்தின் மூலம் மின் கட்டணம் உயராது குறையும். திராவிட நாடு கோரிக்கை வைப்பது மிக மோசமானது. சுயநலத்துக்காக சில பிரிவினைவாதிகள் இத்தகைய கோரிக்கையை வைக்கிறார்கள். தேசிய உணர்வோடு கூடிய தமிழகமே வளர்ச்சி பெறும். மேலும், தமிழ் மண் ஆன்மிக மண். அதுவும் பாஜகவுக்கான மண் என்பதை விரைவில் நிரூபிப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com