கருணாநிதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து

தமிழக அரசியலில் மிக மூத்த தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு இன்று 94-ஆவது பிறந்தநாள். இதனை முன்னிட்டு குடியரசுத்
கருணாநிதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து

புதுதில்லி: தமிழக அரசியலில் மிக மூத்த தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு இன்று 94-ஆவது பிறந்தநாள். இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கருணாநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை பணி வைரவிழா மற்றும் 94-ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் இன்று சனிக்கிழமை (ஜூன் 3) ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார்.

இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வரும் ராகுல்காந்தி, ஆழ்வார்பேட்டை செனடாப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து விழா மேடைக்கு வர உள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

வயதின் மூப்பு காரணமாக உடல் நலம் குன்றி ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை சந்திக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதும் நேற்று திமுக வெளியிட்ட வீடியோ ஒன்றில் கருணாநிதியை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண முடிந்தது. வைர விழா மலரை கருணாநிதி பார்வையிடும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்படும் சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சியின் மேடை தலைமை செயலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய வாழ்த்து செய்தியில், ஆரோக்கிய வாழ்வையும், மகிழ்ச்சியையும் இறைவன் அருளட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com