இருக்கும் இதயத்தை அகற்றாமல் இதயமாற்று அறுவை சிகிச்சை: கோவை மருத்துவர்கள் சாதனை

45 வயதான ஒருவருக்கு இதயத்தை அகற்றாமல் மேலும் ஒரு இதயம் பொருத்தும் அறுவை சிகிச்சையை செய்து கொயம்பத்தூர் மருத்துவர்கள் சாதனை. ஆசிய கண்டத்திலேயே இதுவே முதல்முறையாகும்.
இருக்கும் இதயத்தை அகற்றாமல் இதயமாற்று அறுவை சிகிச்சை: கோவை மருத்துவர்கள் சாதனை

கேரளாவைச் சேர்ந்த 45 வயதான ஒருவருக்கு இதயத்தை அகற்றாமல் மேலும் ஒரு இதயம் பொருத்தும் அறுவை சிகிச்சையை செய்து கொயம்பத்தூர் மருத்துவர்கள் சாதனை. ஆசிய கண்டத்திலேயே இருக்கும் இதயத்தை நீக்காமல் இன்னொரு இதயம் பொருத்துவது இதுவே முதல்முறையாகும்.

கோவை மருத்துவமனையில் கடந்த மே 30-ம் தேதி துடிக்கும் இதயமாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் நேரடி நுரையீரல் அரிமா அனஸ்தோமிசிக் என்னும் முறையில் செய்துள்ளனர். 

நுரையீரலின் அழுத்தம் காரணமாக இவருக்கு சாதாரண இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போன நிலையில் அதற்குப் பதிலாக, இருக்கும் பழைய இதயத்துடன் மேலும் புதிதாக இன்னொரு இதயத்தை அத்துடன் இனைத்துள்ளனர். இதனால் இரண்டு இதயங்களும் சேர்ந்து அதற்கான பணியை செய்யும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். 

இவருக்குப் பொருத்தப்பட்ட புதிய இதயமோ ஒரு பெண்ணினுடையது, மருத்துவர்கள் இந்தப் பெண்ணின் இதயம் நோயாளியின் உடலில் ஏற்கனவே இருக்கும் இதயத்தின் பக்கத்தில் உள்ள இடைவெளியில் சரியக பொருந்தும் வகையில் சிறியதாக இருந்தது உண்மையில் வியப்பிற்குரியது என்றனர். 

இரண்டு இதயத்தையும் ஐந்து ரத்த குழாய்களைக் கொண்டு இணைத்துள்ளனர் மருத்துவர்கள், அவற்றில் இரண்டு தூய்மையான ரத்தத்தைப் பாய்ச்சவும், மீதம் மூன்று தூய்மையற்ற ரத்தத்தை எடுத்துச் செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. இவையனைத்தையும் துடிக்கும் இதயத்துடன் பொருத்துவதே மருத்துவர்களுக்குப் பெரிய சவாலாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com