அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: 500 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூரில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தில் இன்று காலை ஜென்ரேட்டர் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 500 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு.
அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: 500 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூரில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தில் இன்று காலை ஜென்ரேட்டர் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 500 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு. 

பொன்னேரி அருகே இருக்கும் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்திலுள்ள 3 அலகுகளிலும் தினமும் தனித்தனியே 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது அலகிலுள்ள ஜென்ரேட்டரில் தீ பற்றியதால் 500 மேகா வாட் மின் உற்பத்தி தடைப்பட்டு வெறும் 1000 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களுடன் விரைந்து, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்து காரணமாக பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகிவுள்ளன. இதையடுத்து 3-வது அழகில் தீயால் ஏற்பட்ட நாசத்தையும் தீ ஏற்படக் காரணமாயிருந்த பழுதையும் அனல் மின் நிலைய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட தொடங்கினர்.

தி நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தைத் தொடர்ந்து புரசைவாக்கம் ‘சிட்டிமால்’ என்னும் வணிக வளாகம் அதனையடுத்து இந்த அனல் மின் நிலைய தீ விபத்து, இவை அனைத்தும் கட்டிடங்களில் உள்ள தீ பாதுகாப்பு கருவிகளின் செயற்பாடு பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com