குடியரசுத் தலைவர் தேர்தல்: பொது வேட்பாளர் தேர்வில் கருத்தொற்றுமை

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி
திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி. (உடன்) மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,  திமு
திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி. (உடன்) மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திமு

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் கூறினர்.
கருணாநிதியின் வைர விழா, மற்றும் அவரது 94-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர். கருணாநிதியைச் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து தலைவர்கள் விசாரித்தனர்.
பின்னர், சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியது:
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே பல கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் எல்லோரும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த உள்ளோம். மக்களின் குரலை எதிரொலிக்கும் வேட்பாளராக அவர் இருப்பார் என்றார்.
டி.ராஜா கூறியது: பாஜக அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அதன் ஒரு பகுதியாகவே கருணாநிதியின் வைர விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் 17 கட்சித் தலைவர்கள் இணைந்து பேசியுள்ளோம். தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் கருணாநிதியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.
நிதீஷ்குமார் சந்திப்பு: முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 3) முடிந்த பிறகு, பிகார் முதல்வர் நிதீஷ்குமார் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com