வைரவிழாவை கிண்டல் செய்த பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞரா?: ஸ்டாலின் கிண்டல்

வைரவிழாவை கிண்டல் செய்த பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞரா என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.
வைரவிழாவை கிண்டல் செய்த பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞரா?: ஸ்டாலின் கிண்டல்

சென்னை: வைரவிழாவை கிண்டல் செய்த பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞரா என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா, மற்றும் அவரது 94-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்றது.

விழாவில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவைத் திமுக குழு தலைவர் கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வைரவிழா அல்ல வயதானோருக்கான விழா என்று கூறினார்.

இந்நிலையில், இன்று காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சென்னை - திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். காயிதே மில்லத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்திய அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வைரவிழா வயதானவர்கள் விழா என கூறி உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞர். அவரிடம் இருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த விமர்சனம் வயதானவர்களையும், மூத்த குடிமக்களையும் கொச்சைபடுத்துவதைப்போல் போல் உள்ளது.

மேலும், மிருகபலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாஜக, இந்தியை திணிக்க முயற்சிப்பது போல் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com