அந்நிய செலாவணி வழக்கில் ஆஜராக இருந்த சுதாகரன் வருகை ரத்து

அந்நிய செலாவணி வழக்கில் ஆஜராக இருந்த சுதாகரன் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு சிறைத்துறை டிஐஜி சத்திய நாராயணராவ்

பெங்களூரு:  அந்நிய செலாவணி வழக்கில் இன்று ஆஜராக இருந்த சுதாகரன் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு சிறைத்துறை டிஐஜி சத்திய நாராயணராவ் தெரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுதாகரன் மற்றும் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது தொலைக்காட்சிக்கு உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து வாங்கியது தொடர்பான முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறையில் சுதாகரன் அடைக்கப்பட்டிருப்பதாக அவருடைய வழக்குரைஞர் தெரிவித்தார். அவரை சிறைமாற்று வாரண்டு உத்தரவு அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினார்.

இந்நிலையில், இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சுதாகரன் ஆஜராக இருந்தநிலையில், திடீரென பாதுகாப்பு காரணங்களுக்காக சுதாகரனை தமிழகம் அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், போதிய காவலர்கள் இல்லாததால் பாதுகாப்பு தர இயலாது என்று சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com