ஒரு நபர் குழு அறிக்கை கிடைத்தபின் 7-வது ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படும்: முதல்வர்

ஒரு நபர் குழு அறிக்கை கிடைத்தபின் நகராட்சி, கொம்யூன், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர், ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஒரு நபர் குழு அறிக்கை கிடைத்தபின் 7-வது ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படும்: முதல்வர்

ஒரு நபர் குழு அறிக்கை கிடைத்தபின் நகராட்சி, கொம்யூன், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர், ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பேரவையில் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து உறுப்பினர்கள் பேசியது:
ஜெயமூர்த்தி: ஆசிரியர் பணி என்பது உயர்ந்த பணியாகும். அவர்களின் கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி நிலைக்கு ஏற்ப எனக்கூறுவது சரியான பதிலில்லை. 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

அமைச்சர் கமலக்கண்ணன்: கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் அரசு ஊழியர்கள் தவிர, பீம்ஸ் என்ற முறை வந்துள்ளது. தற்போது நிதி கிடைப்பதை பொறுத்து ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. 3 மாதங்கள் ஊதியம் விரைவில் தரப்படும். ஏசிபி, எம்ஏசிபி அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் தரப்படவில்லை. அவர்களது கோரிக்கைகளை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். நிதி போதுமானதாகவும், விரைவில் கிடைத்தால் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரிவோரை நிரந்தரம் செய்வது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை பெறப்பட்டுள்ளது.

7-வது ஊதியக்குழு அரசு ஊழியர்களுக்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகள், பொதுத்துறை பள்ளிகளுக்கு நடைமுறைப்படுத்துவது என்பது நிதியை பொறுத்ததாகும்.

அரசியல் நெருக்கடிகள் காரணமாக தனியார் பள்ளிகளுக்கும் ஊதியம் தருவதாக கூறப்பட்டது. எவ்வாறு தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கினர் எனத் தெரியவில்லை. 

அன்பழகன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தவில்லை. 

அரசு சார்பு நிறுவனங்களைச் சேர்ந்த 13500 பேருக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவீர்களா?
லட்சுமிநாராயணன்: அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக பரிந்துரை உள்ளதா என பார்க்க வேண்டும்.

முதல்வர்: 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற மத்திய அரசு கடிதம் அனுப்பியது. புதுவையில் அரசு ஊழியர்களுக்கு நிறைவேற்றி உள்ளோம். அவர்களது ஊதியத்துடன் இணைத்து தருகிறோம். நிலுவைத் தொகை தரவில்லை. மத்திய நிதி அமைச்சரிடம் நிதி உதவி தர கோரியுள்ளோம்.

கல்வித்துறைக்காக ரூ.565 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு வகைகளில் ரூ.45 கோடி வழங்கப்படுகிறது.

அரசு சார்ந்த நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் பரிந்துரைகளை செயல்படுத்த முன்னாள் தலைமைச் செயலர் விஜயன் தலைமையில் ஒரு நபர் குழு போடப்பட்டது. அதன் பரிந்துரைகள் கிடைத்தபின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com