மருத்துவ மாணவர் சேர்க்கை: நீதித்துறையின் கைகளில் தான் இறுதி முடிவு; ஆளுநர் கிரண்பேடி

நீதித்துறையின் கைகளில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பான இறுதி முடிவு உள்ளது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கை: நீதித்துறையின் கைகளில் தான் இறுதி முடிவு; ஆளுநர் கிரண்பேடி

நீதித்துறையின் கைகளில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பான இறுதி முடிவு உள்ளது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

அவர் இன்று சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவை நமது வாழ்க்கையில் பெரும்பாலும் நடப்பவை தான். பொறுப்பும், அதிகாரமும் கொண்ட அரசு அதிகாரிகள் எதையும் செய்யாத நிலை உள்ளது. பதவிகளை பெறுவதில் மும்முரம் காட்டிக் கொண்டு மக்களுக்கு தைரியமாகவும், நேர்மையாகவும் சேவை செய்யாததால், நம்மைச் சார்ந்துள்ள ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுமக்களுக்கு ஏற்படும் வலி நமக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்டால் தான் அதை நாம் உணருவோம்.

நமது சேவை பொதுமக்களை மேம்படுத்தும் அல்லது புதைகுழியில் தள்ளி விடும் நிலை உள்ளது. இதை வேதனையுடன் கூற வேண்டியுள்ளது. சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

மாணவர்களும், பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ள வலி, பாதிப்புக்கு நாம் அனைவரும் கூட்டு பொறுப்பாகும். இதில் கொண்டாட எதுவும் இல்லை. இந்த நிலை கூட்டு தோல்வியாக உள்ளது. இந்த விவகாரத்தின் தீர்வு நீதிமன்றத்தின் கைகளில் தான் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com