விவசாயிகள் போராட்டம்: தஞ்சை பெரியகோயில், மெரீனாவில் ஏராளமான போலீஸார் குவிப்பு

விவசாயிகளின் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தஞ்சை பெரியகோயில், மெரீனாவில் விவசாயிகள்
விவசாயிகள் போராட்டம்: தஞ்சை பெரியகோயில், மெரீனாவில் ஏராளமான போலீஸார் குவிப்பு

சென்னை: விவசாயிகளின் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தஞ்சை பெரியகோயில், மெரீனாவில் விவசாயிகள் அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை பெரியகோயிலை சுற்றியும், மெரீனாவிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததாகவும், போராட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் போலீஸார் தங்களை கைது செய்தால் நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு எச்சரித்திருந்தார்.

மேலும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை யாரும் சந்திக்க முடியாதபடி போலீஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.  போராட்டம் தொடர்பான செய்தியை சேகரிக்கவோ, விவசாயிகளை சந்திக்கவோ செய்தியாளர்களுக்கு போலீஸார் அனுமதி மறுப்பதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இன்று 2வது நாளாக சென்னை சேப்பாக்கத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும், விவசாயிகள் அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருவதால், விவசாயிகள் போராட்டம் காரணமாக வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் பலர் கூடுவர் என்பதாலும், மெரீனாவில் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதே போல் தஞ்சை பெரியகோவிலை சுற்றிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாய அமைப்புக்கள் போராட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com